‘ஷ்ரூவ்’ கரண் 2019ல் தடாலடியாக திரும்ப வருவாரா?

முன்பு நடித்து ரசிக்கப்பட்ட நடிகர்களான மாதவன், அரவிந்த் ஸ்வாமி போன்றவர்கள் சூப்பர் ஹிட் கொடுத்து திரும்பவும் திரையுலகில் நுழைந்தனர்.

இதுபோன்று, 2018ல் நடிகர் கரண் அவர்களின் நடிப்பு திறனை பாராட்டி பலர் அவர் நடித்த படங்களில் உள்ள காட்சிகளை பகிர்ந்தும் மீம்ஸ் செய்தும் அவரின் திறமையை ஊக்குவித்தனர். இவர் நாளை மாலை 5 மணிக்கு முக புத்தகத்தில் நேரலையில் பேசப்போகிறார். இந்த அறிவிப்பை நடிகர் கரண் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு தின நல்வாழ்துக்களோடு பகிர்ந்துள்ளார். இவர் புது படம் நடிப்பதாக அறிவித்து திரும்பவும் தமிழ் திரையுலகமே அதிரும்படி நுழையவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

‘ஷ்ரூவ்’ பின்னணி இசை

முன்பு பல படங்களில் முக்கிய வில்லன் வேடத்தில் நடிக்கும் இவர், பட காட்சிகளில் வரும்போது ‘ஷ்ரூவ்’ என்ற பின்னணி இசை இவருக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் #shroov வைரலாகி வருகிறது. இவரை ‘ஷ்ரூவ் கரண்’ என்றே அடைமொழியோடு அழைக்கும் அளவுக்கு மீம்ஸ் வழியாக பிரபலம் அடைந்துவிட்டார். இவர் 2018 நவம்பரில் ட்விட்டரில் சேர்ந்தும் இவரை 6238 பேர் பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய பெரிய நடிகர்களை படத்தில் சவால் விடும் இவருக்கு இப்போது பெரும் ரசிகர்களும் உள்ளனர். எனவே 2019ல் ஒருவேளை உண்மையாகவே வேறு நடிகர்களுக்கு சவால் விடுவாரா? என்று எதிர்பாக்கப்படுகிறது.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares