ஐந்து ரூபாய் மருத்துவருக்கு மோடி புகழாரம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் நாற்பத்து இரண்டு வருடத்திற்கும் மேல் வெறும் ரூபாய் ஐந்திற்கும், இரண்டிற்கும், இலவசமாகவும் மருத்துவம் செய்தவர் மருத்துவர். திரு. ஜெயச்சந்திரன்.

ஆயிரக்கணக்கான மக்களின் துயிர் துடைத்த இவர், 71வது வயதில் புதன் (19 ந்தேதி) அன்று காலமானார். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவரை ‘ஹீரோ’ என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வறுமையான குடும்பத்தில் பிறந்த மருத்துவர் ஜெயச்சந்திரன், பள்ளி கல்லூரி படித்து பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் 1971 ஆம் ஆண்டு குடிபெயர்ந்து கிளினிக் ஒன்றை துவங்கினார்.

இவர் எழுபதுகளில் 25 பைசாவையே கட்டணமாக வாங்கிவந்தார். பிறகு காலப்போக்கில் ரூபாயின் விலை உயர்வால் இரண்டு ரூபாயும் ஐந்து ரூபாயும் வாங்கினார். அதனாலேயே இவரை ‘ஐந்து ரூபா டாக்டர்’ என்று மக்கள் குறிப்பிடுகின்றனர். இருபது ரூபாய்க்கு மேல் இவர் யாருடனும் மருத்துவத்திற்கு கேட்டதே இல்லை.

Share

likeheartlaughterwowsadangry
0

2 thoughts on “ஐந்து ரூபாய் மருத்துவருக்கு மோடி புகழாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares