ஐ பி எல் இருந்து வெளியாகிறாரா ஹர்பஜன் சிங்? – லோசலியாவுடன் நடிக்கும் படம்?!

1998யிலிருந்து இந்தியாவிற்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங், இந்த ஆண்டு ஐபிஎல் உடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து கொள்கிறதாக தகவல்கள் வெளியாகின. இதனை அதிகாரப்பூர்வமாக அவரே அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் அழ்ந்துள்ளனர்.

இவர் பிக் பாஸ் வழியாக அறிமுகமான லோசலியாவுடன் ‘பிரெண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதுவே இருவரின் முதல் தமிழ் படமாகும்.

இப்படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் வருவார். இதனை ஷாம் சூர்யா மற்றும் ஜான் பால் ராஜ் இயக்குகின்றனர்.

மேலும் சந்தானம் நடிக்கும், கார்த்திக் யோகி இயக்கும் ‘டிக்கிலோனா’ படித்திலும் நடிக்கிறார். இவர் இதற்குமுன் மூன்று படங்களில் நடித்துள்ளாது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் கோப்ரா படத்தில் விக்ரம், மேலும் பல நடிகர்களுடன் இணைகிறார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *