விஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம்!

விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும்பட்சத்தில், விஜய், விஜய் சேதுபதியிடம் கன்னத்தில் முத்தம் கேட்டு வாங்கியிருக்கிறார்.
மாஸ்டர் படத்தின் கலை இயக்குனர் சதீஷ் குமார் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது விஜய் சேதுபதி எப்போதும்போல சதீஷை அன்பாக அரவணைத்து முத்தம் கொடுத்துள்ளார். உடனே விஜய் “எங்களுக்கெல்லாம் கிடையதா?” என்று கேட்டதும் கொடுத்துவிட்டார் பளிச் என்று கன்னத்தில்.
இதனை பார்த்த படக்குழுவும் சிரிப்பும் கைதட்டலுமாக நின்றனர். இந்த ‘முத்தக் காட்சி’ இன்னும் வெளிவரவில்லை. வெளிவந்தால் தளபதியரின் நெய்வேலி செல்பி போல இதுவும் கண்டிப்பாக வைரல் ஆகும்.
likeheartlaughterwowsadangry
0