ரூ.8.40 கோடிக்கு ஏலம் போன தமிழர் சிவி வருண்

மதுரை அணிக்கு டீ.என்.பி.எல் போட்டியில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி, ரூ. 8.40 கோடிக்கு ஐ.பி.எல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்கு ஏலம் போனர்.
புது போட்டியாளர்களை ஏலம் பேசும் நிகழ்ச்சி நேற்று இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இம்முறை அதிகபட்சமான விலையே ரூ.8.4 கோடிக்கு ஏலம் போனர். இந்த விலையில் வருண் சக்கரவர்த்திஅஸ்வின் தலைமை தாங்கும் கிங்ஸ் லெவேன்பஞ்சாப் அணிக்கும்,ஜெயதேவ் உனட்கட் ராஜஸ்தான் அணிக்கும் விலை போனர்.
வெளிநாட்டு வீரர்கள் அதிகபட்சம் ரூ.7.2 கோடிக்கு ஏலம் போனர். இங்கிலாந்து வீரர் ஆல் ரவுண்டர், சாம் குர்ரான் இவரின் தொடக்க விலை ரூ.2 கோடியாகும். வருண் சக்கரவர்த்திக்கு அடிப்படை விலையே ரூ.20 லட்சமாகத்தான் இருந்தது. இவரின் சிக்கனமாக பந்து வீசும் தன்மை, பல வகையான பந்துசுழற்சியுடன் மதுரை அணிக்கு டீ.என்.பி.எல் போட்டியில் விளையாடியதனை எந்த அணியும் மறக்கவில்லை.
ஒற்றைக்காலில் நின்றது போல் வாங்கும்வரை பஞ்சாப் அணி விலை பேசியது. முதலில், சென்னை சூப்பர் கிங்ஸ்சும், பஞ்சாப் அணியும் அவரை ஏலத்தில் வாங்க போட்டியடித்தனர், ரூ. 3.40 கோடி வந்ததும் சென்னைஅணி பின்வாங்கியது, பஞ்சாப் அணியும் டெல்லி அணியும் கொண்ட மோதலில் ரூ. 4.8 கோடி ஆகி,டெல்லி அணி ஒதுங்கியது. பின்பு ராஜஸ்தான் ராயல்சும் ரூ. 7 கோடியை எட்டியபோது ஒதுங்கி, பஞ்சாப் அணி ரூ.8.4 கோடி விலை பேசியதும், கொல்கத்தா ரைடர்ஸ் அணி ஏலத்தினை விட்டுக்கொடுத்தது.