பொள்ளாச்சியில் NGK குழு

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் என்.ஜி.கே படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் அவ்வப்போது மந்தமாகி, நேரம் கிடைக்கும்போது மீண்டும் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 9௦ சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில் சமீபத்தில் கேரளாவில் கொச்சி மட்டாஞ்சேரி பகுதியில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.
அங்கே சூர்யா சம்பதப்பட்ட பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. அங்கே படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அங்கிருந்து பொள்ளாச்சிக்கு நகர்ந்திருக்கிறது என்.ஜி.கே டீம். பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் பாடல் சம்பந்தப்பட்ட மீதி காட்சிகளை படமாக்கவுள்ளார்களாம்.
likeheartlaughterwowsadangry
0