பனி எங்கே போனது? 100 டிகிரி வெப்பத்தினை தாண்டிய குளு குளு சைபீரியா !

ரஸ்யா நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கிறது சைபீரியா. ‘சைபீரியா’ என்றாலே பனி நிறைந்த மலைகளும் பனிக்கரடிகளும் தான் நினைவில் வரும். இந்நிலமை இவ்வருடம் மாறி வருகிறது இச்சனிக்கிழமை அன்று எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் 100.4 டிகிரி பாரன்கைத்தை (farenheit) தாண்டியுள்ளது. 1979 வரை உள்ள கணக்கில் இல்லாத அளவுக்கு, இந்த மே மாதம் அதிகமான வெப்பத்தை சைபீரியா சந்தித்தது. சராசரியாயக இவ்விடத்தில் மே மாதத்தில் 68 டிகிரி வெப்பம் நிலவும். இதை விட 18 டிகிரி கூடுதலாகவே இந்த மே மாதம் இருந்துள்ளது.
எப்போதும் குளுமையாக இருக்கும் சைபீரியா, ஏன் இப்படி ஆனது? இது பருவநிலை மாற்றம் காரணத்தினால் ஏற்படுகிறது. பருவ நிலை மாற்றத்தினால் தான் நம்மூரிலும் கூட நீர் இல்லா வறட்சி, வெள்ளப்பெருக்கம், கடுமையான வெப்பம், குறைவான மழை ஏற்படுகிறது. இப்பருவ நிலை மாற்றம் மனிதர்களின் செயல்பாட்டினால் ஏற்படுத்தப்பட்டவை. இதில் ஒவ்வொரு மனிதனும் பெரும் பங்கு வகிக்கிறான்.
இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அரசு தான் சரியில்லை என்கிறீர்களா? நாம் முதலில் அரசை குறை சொல்லும் அளவிர்க்கு பொறுப்பான குடிமக்களாக நடந்துகொள்ள வேண்டும். இதற்கு நிறைய வழிகள் உள்ளது.
இந்தியாவானது மக்கள் அடர்த்தியான நாடு. இதனால் நாம் ஒவ்வொருவரும் அறிந்து செய்யும் நல்ல விஷயங்கள் இவ்வுலகுக்கு பேருதவியாக இருக்கும்.
வறட்சி, நீரற்ற நிலை : மழை நீர் சேகரிப்பு எல்லா வீடுகளிலும் கட்டடங்களிலும் இருக்கவேண்டும். குளங்கள் மற்றும் ஆறுகளை ஆக்கிரமிப்பு செய்வதை எதிர்த்து போராடுதல். கழிவு நீர் ஆறுகளில் கலக்காமல் வைக்க வேண்டும். நீரில் குப்பை போடாமல் இருத்தல். மரம் வளர்த்தல்.
வெள்ளப்பெருக்கம் : மரம் வளர்த்தல். குளங்கள் ஆறுகள் வரட்சியின் போது ஆக்கிரமிப்புகளை தவிர்த்தல்.
அதிக வெப்பம், பனி உருகுதல் : எரிப்பாதை தவிருங்கள், முக்கியமாக நெகிழி எரிப்பது தவிருங்கள், குப்பை வண்டியில் நெகிழி குப்பை அளியுங்கள். நெகிழி பயன்பாட்டை குறையுங்கள். மக்கும் குப்பைகளை மக்கவைத்து மாடித்தோட்டம் அமையுங்கள்!
எரிபொருளால் உருவாக்கப்படுகிறது மின்சாரம், அம்மின்சாரத்தை சிக்கனமாக உபயோகியுங்கள்.
காற்று மாசுபடுதல்: தேவையில்லாமல் வாகனம் ஓட்டுவது தவிர்க்கலாம். இந்த முழு அடைப்பு காலங்களில் வீட்டிலேயே வேலை செய்யும் மக்கள், இதற்கு பின்னும் வீட்டிலேயே வேலை செய்யும் வாய்ப்பை நிறுவனங்கள் வழங்கலாம். இதனால் காற்று மாசு குறையும்.
மண், காற்று, நீர் இவற்றை கண்ணென காக்க வேண்டும்! தேவையில்லாமல் ஒலிப்பெருக்கி, பட்டாசு போன்றவை கூட நரம்பு மண்டலத்தை பாதிக்கும். பட்டாசினால் புற்றுநோய் உட்பட பலவகை நோய்களும் ஏற்படும். பெரும் சத்ததினால் விலங்குகளுக்கும் மனிதனுக்கும் பதட்டத்தினை அளிக்கும்.
நினைவில் கொள்ளுங்கள் உலகம் மனிதனுக்கான இடம் மட்டுமே இல்லை எல்லா மிருகங்களும், பூச்சிகளும், தாவரங்களும் இங்கே வாழலாம். கொன்று அழிக்காதீர்கள், இடம் கொடுங்கள். நாம் இயற்க்கையோடு ஒன்றி வாழவேண்டுமே ஒழிய இயற்கைக்கு மாறாக செயல்கள் செய்யச் செய்ய வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ, வெட்டுக்கிளிகள் படையெடுப்பு போன்ற உச்சங்கள் ஓடி வந்து நம்மை சந்திக்கும்.