நான்கு கருத்து படம், ஒரு காமெடி படம்: விஷ்ணு விஷால் திட்டம்

விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த ராட்சன் படத்திற்கு பிறகு, வருகிற 21ந் தேதி வெளிவரும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இதனை எழிலின் உதவியாளர் செல்லா அய்யாவு இயக்கி இருக்கிறார். ரெஜினா, ஓவியா, ஆனந்தராஜ், யோகிபாபு, கருணாகரன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ரெட்ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுகிறார். படம் தொடர்பாக விஷ்ணு

 அளித்த பேட்டி வருமாறு:

எனது தயாரிப்பில் வரும் 3வது படம் இது. எனது தயாரிப்பில் தொடர்ந்து காமெடி படங்களை கொடுத்து வருகிறேன். காரணம் எனக்கு காமெடி வராது. அதனால் என்னை வைத்து யாரும் காமெடி படம் எடுக்க மாட்டார்கள். அதனால் எனக்கு நானே காமெடி படம் எடுத்துக் கொள்கிறேன். ராட்சனில் சீரியசான சப் இன்ஸ்பெக்டர் வேடம், இதில் காமெடி கான்ஸ்டபிள் வேடம்.
போலீஸ் அதிகாரிகளுக்கு டீ காப்பி வாங்கிக் கொடுத்து இருக்கிற இடம் தெரியாமல் கம்னு இருந்திருட்டு போயிடணும்னு நினைக்கிற ஒரு கேரக்டர். ஒரு கொடூர தாதாவை சந்திக்க வேண்டியது வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. அதற்காக பாட்ஷா மாதிரி திடீர் வீரன் ஆவதெல்லாம் கிடையாது. நான் செய்கிற சில குறும்புகள் எனக்கு சாதகமாக மாறி என்னை உயரத்தில் தூக்கி வைத்துவிடும். அதுதான் காமெடிக்கான விஷயமுமாக இருக்கும். ரெஜினா எனது முறைப்பெண்ணாக நடித்திருக்கிறார். ஓவியா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ராட்சன் மாதிரி, நான்கு சீரியசான கருத்து படங்கள் நடிக்க வேண்டும், இடையில் ஒரு காமெடி படம் நடிக்க வேண்டும். இதுதான் என்னோட எதிர்கால திட்டம். அதற்கு ஏற்றமாதிரி கதை கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் உயரம் எனக்குத் தெரியும். என் மார்க்கெட் எனக்குத் தெரியும். அதற்குரிய பட்ஜெட்டில் தான் படமும் இருக்கும் என்றார்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares