சினிமா பிரியர்களுக்கு இனி 24 மணி நேரமும் கொண்டாட்டம்

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அதிகாலை காட்சி திரையிடுவதற்கே அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்குகளில் சினிமா திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கவும், தொழிற்சாலைகள் இயங்கவும் நேற்று தமிழக அரசு அனுமதித்து அரசாணை பிறப்பித்த நிலையில் தற்போது 24 மணி நேரமும் திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.
இருப்பினும் முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் தினங்கள் தவிர மற்ற நாட்களில் 24 மணி நேரமும் திரையரங்குகளில் சினிமாக்கள் திரையிடப்படுமா? அப்படியே திரையிடப்பட்டாலும் பார்வையாளர்கள் வருவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்