“என் கணவனுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன்”- திருப்பூர் ஆணவக்கொலை விவகாரம்

“என்னுடய கணவனுக்கு நீதி கிடைக்கும் வரும் வரை போராடுவேன்,” என்கிறார் உயர் நீதிமன்ற தீர்ப்பினால் ஏமாற்றமடைந்த, ஆணவக்கொலை செய்யப்பட்ட ஷங்கரின் மனைவி கௌசல்யா.
நான்கு ஆண்டுகளுக்கு முன், பொறியியல் பட்டம் பெற்ற தலித் ஜாதியை சார்ந்த சங்கர் என்பவரை தேவர் ஜாதியை சார்ந்த கௌசல்யா திருமணம் செய்ததால், கீழ் ஜாதி என்ற ஒரே காரணத்தினால், கௌசல்யாவின் குடும்பத்தினர் ஷங்கரை என்னுடய கணவனுக்கு நல்ல தீர்ப்பு வரும் வரை போராடுவேன் செய்ய முடிவெடுத்துள்ளனர். மூன்று நபர்கள் ஊடுமலபேட் பேருந்து நிறுதத்தில் இத்தம்பதியினரை தாக்கினர். இதில் 22 வயதே ஆன ஷங்கர் உயிரிழந்தார், 19 வயதான கௌசல்யா உயிர் தப்பி, தந்தை சின்னச்சாமி மீது திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
இவ்வழக்கில் உள்ள மொத்தம் பதினொன்று குற்றவாளிகளில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு 2017-ல் திருப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனைத் தீர்ப்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து இன்று உயர் நீதிமன்றத்தில் எம்.சத்யநாராயணன் மற்றும் எம்.நிர் மல்குமார் மேல்முறையீடாக அளித்த தீர்ப்பில், முக்கிய குற்றவாளிகளான சின்னசாமி உட்பட ஆறு பேருக்கும் தூக்கு தண்டனையிலிருந்து விடுப்பு கொடுத்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு உள்ளது.
” இத்தீர்ப்பு திடீர் என்று அறிவிக்கப்பட்டது ஏன் ?” என சந்தேகம் எழுப்பினார் கௌசல்யா. மேலும் இத்தீர்ப்பு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக ஷங்கரின் சகோதரர் யுவராஜ் கூறியுள்ளார். ஆணவக்கொலை போன்ற கொடுமைகளுக்கு கடுமையான தீர்ப்பு கொடுத்தாலே ஒழிய இது போன்ற கொலைகள் தொடரும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.