இந்தியன் 2 படத்திற்காக புதிய கலை கற்கும் நடிகை காஜல் அகர்வால்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். 

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி மேக்கப் டெஸ்ட் மற்றும் படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் கதாநாயகியான காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அப்பதிவில் இந்தியன் 2 குறித்த தகவல் இருப்பதாக கருதப்படுகிறது. காஜல் அகர்வால் தற்காப்புக் கலையான கலரிபயிற்சி தொடர்பான புத்தகத்தை வைத்திருந்தார்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *