அடுத்தடுத்து இரண்டு படங்கள் : அஜித் படங்கள் குறித்த ஆச்சர்ய அறிவிப்பு

விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து, ‘ தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீ-மேக்கான இந்த படத்தை பாலிவுட் படத் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிக்க இருக்கிறார் என்பது தெரிந்த விஷயம்தான்.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்று முதலில் பேசப்பட்டது. ஆனால் ‘அஜித்-59’ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். குறுகியகால தயாரிப்பாக இருப்பதால் யுவன் சங்கர் ராஜாவை சிபாரிசு செய்துள்ளார் அஜித். அதன்படியே யுவனை புக் பண்ணியுள்ளனர்.

இந்த படத்தை அடுத்த ஆண்டு மே மாதம், 1-ஆம் தேதி, அதாவது அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்ல, ‘Bayview Projects LLP’ என்ற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்கும் ‘அஜித்-59’ படத்தை தொடர்ந்து மற்றுமொரு தமிழ்ப்படத்தையும் தயாரிக்க இருக்கிறார் போனிகபூர். அஜித் 60 என்ற அந்தப்படம் 2020 ஏப்ரலில் வெளியாகிறது.

அஜித் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டநிலை மாறி, அடுத்தடுத்து நடிக்க உள்ள 2 படங்கள் பற்றிய அறிவிப்பை முன்கூட்டியே அறிவித்துள்ளது திரையுலகில் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares